இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரி இருந்து பும்ரா விலகல்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரி இருந்து பும்ரா காய்ம காரணமாக விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அயலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே என பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக அண்மையில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த் அணியில் இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாலர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெற்றிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்ட பும்ரா குணமடைந்ததாக அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. இந்தநிலையில் மீண்டும் பும்ராவுக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டியில் விளையாடினால் நிலமை மேலும் மோசமைடய வாய்ப்புள்ளதால் பும்ரா இலங்கிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக ஆகிப் நபி அல்லது யஷ் தாக்குர் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நிதிஷ்குமார், ஹர்ஷித்ராணா, நாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது பும்ரா விலகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.