நாளை வெளியாகிறது #SquidGame2 சிறப்பு டீசர் – #Netflix அறிவிப்பு!

ஸ்குவிட் கேம்’ 2-வது சீசனின் ஸ்பெஷல் டீசர் நாளை வெளியாகும் எனநெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம்…

#SquidGame2 special teaser out tomorrow - #Netflix announcement!

ஸ்குவிட் கேம்’ 2-வது சீசனின் ஸ்பெஷல் டீசர் நாளை வெளியாகும் எனநெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள்.

ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.  இந்த நிலையில், ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் டிசம்பர் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.  இதன் 3வது மற்றும் கடைசி சீசன் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்குவிட் கேட் தொடரின் ஸ்பெஷல் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘ஸ்குவிட் கேம்’ 2-வது சீசனின் ஸ்பெஷல் டீசர் நாளை வெளியாகும் எனநெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.