முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நண்பர்கள் புடைசூழ தேர்வெழுதிய மணப்பெண் : வைரல் ஆன மாணவியின் வீடியோ

மருத்துவ மாணவி ஒருவர் மணப்பெண் கோலத்தில் திருமணப் புடவையுடன் லேப் கோட் மற்றும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்தபடி தேர்வறைக்கு வந்து தேர்வெழுதிய வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் வந்த மணப்பெண்ணின் பெயர் ஸ்ரீ லெக்ஷ்மி அனில். இவர் கேரளாவில் உள்ள பெத்தானி நவஜீவன் பிசியோதெரபி கல்லூரியில் படித்து வரும் மாணவி ஆவார். சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் அந்த பதிவில் ஸ்ரீ லெக்ஷ்மி அனில் மஞ்சள் நிறப் புடவைவில், பாந்தமான நகைகைள் அணிந்த படி முகம் முழுவதும் மணபெண்ணிற்கே உரிய ஒப்பண்ணைகளுடன் வருகிறார். அப்போது அவரது வகுப்பு நண்பர்கள் மகிழ்ச்சியுடன்
அழைத்து செல்ல அவரும் சிரித்த படி கை ஆசைத்து செல்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்தையும் படிக்க: ’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

மற்றொரு வீடியோ பதிவில் ஸ்ரீ லெக்ஷ்மி தேர்வு அறை நோக்கி நடந்து செல்லும் வழியில் மாணவர்கள் ஆரவாரம் செய்ய, பின் அவர் தேர்வு மையத்தை அடையும் போது, ​​அவருடைய தோழிகளில் ஒருத்தி அவருடைய புடவையின் மடிப்புகளை சரிசெய்வதையும், மற்றொருவர் அவரது கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைப்பதையும் நாம் பார்க்க
முடியும். பின்பு இறுதியாக பரீட்சை முடிந்ததும், மணப்பெண்ணான ஸ்ரீ லெக்ஷ்மி வெளியே வந்து தன் தாயைக் கட்டிப்பிடித்துக் மகிழ்ந்ததை அந்த வீடியோ பதிவு காட்டுகிறது.

சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது , கிட்டத்தட்ட 153,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும் சில பார்வையாளர்கள் அவரை பாராட்டியும் , தேர்வில் வெற்றிபெற வாழ்த்தியும், தங்கள் மகிழ்ச்சியை கருத்துக்களாக பதிவிட்டும் வருகின்றனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram