1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவன்

லக்னோவில் 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை, 13 வயது சிறுவனின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,…

லக்னோவில் 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை, 13 வயது சிறுவனின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சிறுவனையும் அவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் திட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்துச் சென்று கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவன் கூறிய இந்தத் தகவல் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லக்னோ அருகே சைர்பூர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் இருந்து இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு வயது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், குழந்தையை சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அச்சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, சிறுவன் போலீஸாரிடம் கூறியுள்ளதாவது: ஒரு வயது குழந்தை அவளுடைய வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இதையடுத்து, குழந்தையை உடனடியாகத் தூக்கிக் கொண்டு என் பள்ளிக்குச் சென்று குழந்தையின் கால்களில் செங்கல்லைக் கட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன் என்று அவனது பெற்றோர் முன்னிலையில் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவனின் செயல் இப்பகுதி மக்களிடேயை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.