7 ஆண்டுகளுக்கு முன்பு ரியா என்ற சிறுமியை சந்தித்திக்க முடிவு செய்த ஆனந்த் மஹிந்திரா தற்போது அந்த சிறுமியை சந்தித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேலான Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.
இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காண முடியும். அத்துடன் எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
அந்த வகையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ட்விட்டர் கணக்கு ஒரு குழந்தை காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் படத்தை ட்வீட் செய்ததோடு அதில், எனக்கு எப்போது 18 வயது வரும்?.. அதற்கு இன்னும் 16.5 வருடங்கள் உள்ளன. லவ் ஃபார் கார். என எழுதி ஆனந்த் மஹிந்திராவை டாக் செய்திருந்தனர். இதை கண்ட ஆனந்த் மஹிந்திரா இந்த பதிவை ரீ ட்வீட் செய்து இந்த படம் எங்கள் சாதனையின் வெளிப்பாடாக உள்ளது. இந்த சிறுமியைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என தெரிவித்திருந்தார்.
Yesterday evening, this charming young lady, Rhea, came up to me & reminded me I had tweeted a pic of her seven years ago, when she was a year old! Thank you @Gaurishrulz for sharing that tweet. The countdown continues. I, too, can’t wait for her to get behind the wheel (and… pic.twitter.com/n0LmilWqqN
— anand mahindra (@anandmahindra) June 11, 2023
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தையை நேரில் சந்தித்து உள்ளார் ஆனந்த் மஹிந்திரா. இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “நேற்று மாலை, இந்த அழகான இளம் சிறுமி ரியா, என்னிடம் வந்து, 7 ஆண்டுகளுக்கு முன்பு, அவளுக்கு ஒரு வயதாக இருந்தபோது, நான் அவளுடைய படத்தை ட்வீட் செய்ததை எனக்கு நினைவூட்டினார். எங்கள் கார்களில் ஒன்றை இந்த சிறுமி ஒட்டிச் செல்லும் வரை நானும் காத்திருக்க முடியாது” என அவர் அந்த ட்வீடில் தெரிவித்திருந்தார்.








