அயோத்தி ராமர் கோயிலில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தரிசனம்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன்…

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார்.  இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இவர் வலம் வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப்பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து திரைப்படங்களில் வெப் சீரிஸ் களிலும் நடித்து வருகிறார. இவருக்கு  மல்டி மேரி என்ற  பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு கோவில் முறைப்படி உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

https://twitter.com/yuvnique/status/1770393786470072358

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.