மத்தியபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – உயிரிழப்பு எணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

மத்தியபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த அணையில் நேற்று சொகுசு சுற்றுலா படகு சென்றுள்ளது. அந்த படகில் சுற்றுலா பயணிகள் உள்பட மொத்தம் 31 பேர் பயணித்துள்ளனர்.

அணையின் மையப்பகுதியில் படகு சென்றபோது திடீரென அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அணைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 16 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தண்ணீரில் மூழ்கி மாயமான எஞ்சிய 6 பேரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.