அர்ஜுன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் பிளாஸ்ட். அறிமுக இயக்குநர் சுபாஷ்.கே. சுரேஷ் இயக்கி இருந்த இப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார்.
விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் ரூ. 76 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




