கருப்பு பூஞ்சையை தடுப்பதில் கவனம் தேவை: பிரதமர்!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு இடையே கருப்பு பூஞ்சை தொற்றை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனது தொகுதியில் நடைபெற்று…

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு இடையே கருப்பு பூஞ்சை தொற்றை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனது தொகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அந்த தொகுதியின் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வழியே பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்களுக்காக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதாக கூறினார். வரும் காலங்களில் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுத் தடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளதையும் பிரதமர் மோடி சுட்டிக்காடினார். இந்த நிலையில் கருப்பு பூஞ்சைஎன்ற தொற்று புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே கருப்புப் பூஞ்சை பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.