கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்: வல்லுநர்கள் குழு அறிக்கை என்ன சொல்கிறது?

கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருப்பு பூஞ்சை நோய்த்…

கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருப்பு பூஞ்சை நோய்த் தாக்கம் குறித்து ஆராயப் பல்துறை வல்லுநர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு தமிழ்நாடு அரசிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்குத் தொடர் சிகிச்சை தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரியச் சிகிச்சை அளித்தால், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.