“சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி…

“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளன.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜன.30) நடைபெற்றது.  இண்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜக-வை எதிர்த்துக் களமிறங்கின.  பாஜக 16 வாக்குகளையும் இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன.

இதையும் படியுங்கள்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? – டி.ஆர்.பாலு பேட்டி! 

தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த மனோஜ் சோங்கர்,  ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை வென்றுள்ளார்.  இந்த நிலையில் “பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் x தளத்தில் கூறியதாவது:

“சண்டிகர் மேயர் தேர்தலில் பட்டப்பகலில் ஏமாற்றியது மிகவும் கவலையளிக்கிறது.  ஒரு மேயர் தேர்தலில் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கினால்,  நாட்டின் தேர்தலில் எந்த எல்லைக்கும் செல்லலாம்.  இது மிகவும் கவலை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.