அசாமில் 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து பாஜக அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. இறுதி கட்டத்தகவலின் படி அங்கு பாஜக 74 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அசாம் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் தான் போட்டியிட்ட மஜுலி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். சர்பானந்தாவுக்குப் பதில் வேறு ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் அசாம் பாஜக எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய உள்ளனர்.
மெகா கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அசாமில் 50 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலை விட 8 தொகுதிகளை காங்கிரஸ் கூடுதலாக கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.