“பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும்” – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி!

பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று(ஏப்ரல்.02) தாக்கல் செய்யவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,  “எங்கள் கட்சி வக்ஃப் சட்டத் திருத்த மசோதா எதிர்க்கும். இந்த மசோதா யாருக்காக கொண்டு வரப்படுகிறதோ அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதை விட பெரிய அநீதி என்ன இருக்க முடியும்?. பாஜகவுக்கு நிலம் என்றால் பிடிக்கும். அவர்கள் ரயில்வே நிலம், பாதுகாப்பு நிலங்களை விற்றார்கள், அதுபோல் வக்ஃப் நிலம் விற்றுவிடும். உத்திர பிரதேஷ முதலமைச்சர் தனது  அரசியலை பகுதிநேர வேலை என்கிரார். அத்தகைய பகுதிநேரமாக வேலை செய்பவரை டெல்லி மக்கள்  ஏன் நீக்க கூடாது?” இவ்வாறு அவர் பேசினார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய நிலையில், மசோதா JPC – குழு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதில் உள்ள பெரும்பான்மை பாஜக கூட்டணி  கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 44 திருத்தங்கள் கொண்ட வக்ஃப்  சட்ட மசோதாவை INDIA  கூட்டணி கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் NDA கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரித்தும் வருகின்றனர். தாக்கல் செய்யபடவுள்ள இந்த மசோத தொடர்பாக 8 மணி நேர விவாதம் நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் கூட்டணி கட்சியினரை அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.