கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

கூட்டணி குறித்து பாஜக தங்களிடம் எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் சசிகலாவை, தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

கூட்டணி குறித்து பாஜக தங்களிடம் எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் சசிகலாவை, தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் ஓய்வில் இருக்கிறார் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். மேலும், அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம், அதன்பின் அதிமுகவை மீட்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஒ.பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயம் வரவேற்போம் என்று கூறிய டிடிவி.தினகரன், அதிமுக – அமமுகவை இணைக்க பாஜக எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். கூட்டணி குறித்து பாஜக தங்களிடம் எதுவும் பேச்சு நடத்தவில்லை எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.