உ.பி.யில் 14 குழந்தைகளுக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட கொடூரம் – பாஜக மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் விமர்சனம்!

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் யோகி அரசை மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். தலமீசியா என்னும் ரத்த மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தி குறைவாக இருப்பதால்…

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் யோகி அரசை மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலமீசியா என்னும் ரத்த மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தி குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் ரத்தம் ஏற்றிக் கொள்வது வழக்கமாக உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இவ்வாறாக தலமீசியா குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு ரத்தம் ஏற்றப்பட்ட 6 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.ஐ.வி மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம் பெறும்போது கொடையாளியின் ரத்தத்தை முறையாக சோதனை செய்யாமல் பெற்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில் இதுபோல சுமார் 180 பேர் ரத்தம் பெற்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://twitter.com/kharge/status/1717027398938767809?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717027398938767809%7Ctwgr%5E61665368112af34d7f7ac0b3bf6901999657decd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.news24online.com%2Fstate%2Fup-uk%2Fmallikarjun-kharge-over-yogi-government-for-hiv-infected-blood-transfusion-to-14-children%2F405092%2F

இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மருத்துவமனையின் இந்த மிகப்பெரிய அலட்சியம் குறித்து பாஜக அரசை தாக்கி, தந்து X தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட, 14 குழந்தைகளுக்கு, பாதிக்கப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது. இதனால், குழந்தைகளுக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி, சி., போன்ற கடுமையான நோய்கள் வந்துள்ளன.  இந்த அலட்சியம் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு அப்பாவி குழந்தைகள் தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.