10 ரூபாய் நாணயம் தந்தால் பிரியாணி!

10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் பல…

10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் பல இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும் பத்து ரூபாய் நாணயத்தை மளிகை கடை, காய்கறி கடை, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதோடு, தவிர்த்தும் வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே இன்று புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு, 10 ரூபாய்க்கே சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இந்த பிரியாணி கடை முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர். அங்கு வந்து வரிசையில் 10 ரூபாய் நாணயங்களுடன் நின்ற 125 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 10 நாணயத்தை அனைவரும் வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரியாணி கடையின் உரிமையாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.