கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான…

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த பறவைகளைக் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டமாக நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்பொழுது வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பறவைகள் இருந்ததாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்தது தற்போது இரண்டாவது கட்டமாக  பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனப்பகுதி , பறவைகள் சரணாலயம் பகுதி, கடற்கரை பகுதி, கிராமப்பகுதிகளில் நடைபெற்றது.

அதில் மயில், மைனா, மரங்கொத்திப் பறவை, மணிப்புறா. மாடப்புறா, கழுகு உள்ளிட்ட 70 வகையான பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் வனத்துறையினர் 40க்கும் மேற்பட்டோர் 10 வழித்தடங்களில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று மாலை நிறைவு பெறும் என கோடியக்கரை வனத்துறை அதிகாரி அயூப்கான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.