இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத் பற்றிய பத்து தகவல்கள்.
1. தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமியில் மாணவராக பயிற்சி பெற்றவர் பிபின் ராவத்.
2. தந்தை பணியாற்றிய அதே பிரிவில் 1978-ஆம் ஆண்டு பிபின் ராவத் ராணுவத்தில் இணைந்தார்.
3. படைப்பிரிவின் தளபதி, கமாண்டிங் இன் சீப், தெற்கு கட்டளை அதிகாரி, உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை பிபின் ராவத் வகித்துள்ளார்.
4. கர்னல் ராணுவ செயலாளர், ராணுவ இணைச் செயலாளராகவும் பிபின் ராவத் பணியாற்றியுள்ளார்.
5. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பிபின் ராவத் அங்கம் வகித்துள்ளார்.

6. வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகள், இந்திய – சீன எல்லைப்பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவம் பிபின் ராவத்திற்கு உண்டு.
7. ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27 வது தலைமை தளபதியாக டிசம்பர் 31, 2016 முதல் பொறுப்பேற்றார்.
8. பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் அன்று முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.

9. முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதல் நபராக பிபின் ராவத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
10. பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; திக் திக் நிமிடங்கள் #BipinRawat | #Ooty | #IndianArmy | #ArmyCDS | #Nilgiris | #IndianAirForce | @IAF_MCC pic.twitter.com/mLtDMA3vsM
— News7 Tamil (@news7tamil) December 8, 2021







