முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது எப்படி ?

குன்னூர் அருகே காட்டேரி பார்க், நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு: 

இந்த விபத்து குறித்து நஞ்சப்பா சத்திரம் பகுதியில் வசித்திவரும் முதியவர் கூறியதாவது:

“ஹெலிகாப்டர் வந்து கொண்டிருந்தது. ஒரே சத்தமாக இருந்தது. கிழே இருக்கும் மரத்தில் இடித்து ஹெலிகாப்டர் நொறுங்கி கிழே விழுந்தது. உடனே கடும் புகை ஏற்பட்டது. அருகில் இருப்பவரை அழைத்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைக்கச் சொன்னேன். அதற்குள் ஒருவர் எரிந்து விழுகிறார். தொடர்ந்து மற்ற நபர்களும் எரிந்து கிழே விழுந்தனர்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மற்றும் ஒருவர் விபத்து குறித்து கூறியதாவது: “என்னோடு வேலை செய்பவருக்கு தொலைபேசியில் விபத்து நடந்து குறித்து தகவல் வந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தபோது எல்லா இடத்திலும் தீ பற்றத் தொடங்கியது. ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் இருந்தார். உதவுவதற்காக நாங்கள் அவருடன் சென்றோம். பனிமூட்டமாக இருந்தது. இந்த விபத்து நடந்தபோதும் மேகமூட்டமாகத்தான் இருந்திருக்கிறது. ஒரு ராணுவ அதிகாரி கையசைத்து உதவி கேட்டார். அவரை போர்வையை சுற்றி மீட்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தோம். எப்போதும் இந்தப் ஹெலிகாப்டர் செல்வது வழக்கம். தரையிலிருந்து உயரமாக எப்போதும் செல்லும் ஹெலிகாப்டர் இன்று தாழ்வாக சென்றுள்ளது. மரத்தில் மோதி, பின்னோக்கி சென்று கீழே விழுந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் விழவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 16 பேர் வரை பயணித்துள்ளதாக விபத்து பகுதியை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ் வழி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு? – அமைச்சர் பதில்

Saravana Kumar

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Ezhilarasan

வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!

Ezhilarasan