பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை கொலை!

விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் அமைச்சருமான முகேஷ்  சஹானியின் தந்தையான ஜிதன் சஹானி கொலை செய்யப்பட்டுள்ளார்.  பீகார் மாநிலம் தர்பங்காவில் விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் அமைச்சருமான முகேஷ்…

விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் அமைச்சருமான முகேஷ்  சஹானியின் தந்தையான ஜிதன் சஹானி கொலை செய்யப்பட்டுள்ளார். 

பீகார் மாநிலம் தர்பங்காவில் விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் அமைச்சருமான முகேஷ் சஹானியின் தந்தையான ஜிதன் சாஹ்னி மர்ம நபர்களால் அவருடைய மூதாதையர் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தந்தையை பார்ப்பதற்காக மும்பையில் இருந்த முகேஷ் சஹானி, பாட்னாவிற்கு புறப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தர்பங்கா எஸ்எஸ்பி ஜெகநாத் ரெட்டி உறுதி செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முகேஷ் சஹானி விகாஷீல் இன்சான் கட்சி என்ற கட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். முதலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த இவர் பின்னர் பாஜகவிலிருந்து பிரிந்து இந்தக் கட்சியைத் தொடங்கினார். பீகார் முன்னாள் முதலமைச்சரான நிதீஷ் குமாரின் ஆட்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.