முக்கியச் செய்திகள் இந்தியா

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய முறைகேடு-ஆ.ராசா குற்றச்சாட்டு

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் மத்திய தகவல் தொலைத் தொடர்பு த்துறை அமைச்சரும், திமுக மக்களவை எம்.பி.யுமான ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் “வன விலங்கு திருத்த மசோதா” நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

30 மெகா ஹெட்ஸ் அலைக் கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார்.

ஆனால் இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது?

எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

2ஜி, 3ஜி, 4ஜி ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 5-6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அமைச்சர் கூறினார். ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது என்பதால் டிராய் தலைவர் வினோத் ராய் யாருக்காக இதை செய்தார் என விசாரிக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் அமைச்சர் என்பதை மறந்து குறுகிய அரசியலில் நடந்து கொள்ளும் அமைச்சர்கள் மாநில கட்சியையும், மாநில அரசையும் குறிப்பிட்டு பேசுவது அவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மைக்குள் வந்து உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று ராசா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனை

Web Editor

தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

G SaravanaKumar

பொதுக்குழுவுக்கு வாருங்கள் ஓபிஎஸை அழைக்கும் இபிஎஸ்

EZHILARASAN D