பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து புவனேஷ்வர் குமார் சாதனை!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், டி 20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான…

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், டி 20 போட்டிகளில்
பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை
படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை தொடர்ந்து தற்போது அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்றைய தினம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் புவனேஷ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பல் பெர்னி விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்தியதன் மூலம், சர்வதேச டி 20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் 34ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கு முன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 33 விக்கெட்டுகள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் உடன் சமநிலை வகித்திருந்தார்.

இந்நிலையில், புவனேஷ்வர் குமார் நேற்று கைப்பற்றிய 1 விக்கெட் மூலம் 34
விக்கெட்டுகள் எடுத்து, சர்வதேச டி 20 போட்டிகளில், பவர் ப்ளே ஓவர்களில் அதிக
விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.