தனுஷ் படத்தில் இணைந்த பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு…

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு டி44 என தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு வரும் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடிக்க இருக்கின்றனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹர், தனுஷ் நடிப்பில், யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.