மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த பாரதிராஜா…!

மீண்டும் அவதாரம் எடுத்துள்ள  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய படத்தின் ஷீட்டிங்  உசிலம்பட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்…

மீண்டும் அவதாரம் எடுத்துள்ள  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய படத்தின் ஷீட்டிங்  உசிலம்பட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள அவரது குல தெய்வ கோவிலில் இன்று பொங்கல் வைத்து தனது புதிய படத்திற்கு பூஜை செய்து படப்பிடிப்பை துவங்கினார்.

படத்திற்கு தாய்மெய் என பெயரிடப்பட்டுள்ள சூழலில், மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், பவதாரணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளேன், 6 ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள், 1964 ல் ஒரு நடிகனாக வேண்டும் என திரை உலகத்திற்கு வந்தேன் அந்த வாய்ப்பு 84 வயதில் தான் கிடைத்தது, சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன்.

என்ன தான் இருந்தாலும் இயக்குவதில் இருக்கும் பலம், சக்தி நடிப்பது வேறு இயக்குவது வேறு, நீண்ட காலம் இயக்காமல் இந்தது ஒரு ஏக்கத்தை தந்தது, அதனால் இப்படி ஒரு படத்தை ஆரம்பித்துள்ளேன்.தாய்மெய் என பெயரிட்டுள்ளேன், தாய் உண்மையானவள் என்ற தலைப்பு, ஒரு தாய் எப்படி பட்டவள் என்பதை சொல்லியுள்ளேன், என் மண் கருமாத்தூரில் என் மண் சார்ந்த, என் மக்கள் சார்ந்த ஒரு படைப்பு, எனது குல தெய்வ கோவிலில் பூஜை செய்து துவங்கியுள்ளேன்.

25 நாட்களில் படம் முடியும் எனவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன், என்னையும், நாயகியாக அறிமுகம் ஆகும் மஹானா என்பவரையும் மூன்று கால கட்டத்தில் வாழ்வதை போல காணலாம், இதுவரை இல்லாத பாரதிராஜா போன்று இல்லாமல் வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்கலாம் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.