ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றார் பஜன்லால் சர்மா!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.  இதனைத் தொடர்ந்து முதல்வராக பஜன்லால் சர்மா,  துணை முதல்வர்களாக தியா…

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.  இதனைத் தொடர்ந்து முதல்வராக பஜன்லால் சர்மா,  துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் வளாகத்தில் பதவியேற்பு விழா நடந்தது.  இந்த விழாவில், இன்று(டிச.,15) 56வது பிறந்த நாள் கொண்டாடும் பஜன்லால் சர்மா முதல்வராக பதவியேற்றார்.  ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தியாகுமாரி,  பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் ஜெ.பி.நட்டா, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.