ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்பு!…

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்கவுள்ளார்.  ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு…

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்கவுள்ளார். 

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா சில தினங்களுக்கு முன் தோ்வு செய்யப்பட்டாா். முதல்முறை பாஜக எம்எல்ஏவான இவா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவா். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோா் தோ்வாகினா்.

இந்நிலையில், ஜெய்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வா் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.