முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள்: தமிழ்நாடு முதலிடம்

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியா டுடே இதழ் ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 2022ம் ஆண்டிற்கான “சிறந்த செயல்திறன்” கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹிமாச்சல் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், கேரளா 3ம் இடத்திலும், குஜராத் 4ம் இடத்திலும், பஞ்சாப் 5ம் இடத்திலும் உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதுகுறிதுது மக்கள் நல்வாழ்வுதுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், INDIA TODAY” இதழ் நடத்திய ஆய்வில் ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் 2022 ம் ஆண்டிற்கான “சிறந்தசெயல்திறன்” கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைத் திறனுக்கான அங்கீகாரம் என பதிவிட்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக இந்த பிரிவுகளுக்காக இந்தியா டூடே நடத்திய ஆய்வில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஷ்யாவில் பைக் பயணம்.. ’தல’ அஜித்தின் தாறுமாறு திட்டம்

G SaravanaKumar

திமுக அரசு செய்தது என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

EZHILARASAN D

பொங்கலுக்கு சிறப்பு பேருந்து; அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை

Jayasheeba