முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருதினை வழங்கி ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அப்போது, ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில், சிறந்த மனிதருக்கான விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் தலைமையிலான செஸ் கூட்டமைப்பினர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது, அந்த அமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் சிறந்த மனிதருக்கான விருதை முதலமைச்சருக்கு வழங்கினர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்த விருது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.







