தொடர்ந்து உயரும் தக்காளி விலை: சென்னையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை!

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.  நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக…

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது. 

நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறைந்தபாடில்லை. வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் தர தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சின்னவெங்காயம் கிலோ 90 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு முக்கிய தேவையாக தக்காளி, மற்றும் வெங்காயம் உள்ளது. எனவே தக்காளி மற்றும் சின்ன வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.