ஓடும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து மடிக்கணினியில் பணிபுரியும் பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு, போக்குவரத்துக்கு பெயர் போனது. நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படும் துன்பம் விவரிக்க முடியாதது.
உலகின் இரண்டாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமான பெங்களூரில் 2-3 கிலோமீட்டர் பயணம் செய்ய 1 மணிநேரத்திற்கும் அதிகமாகும். விடுமுறை நாட்களில் சொல்லத் தேவையில்லை. சொந்த ஊர்களுக்குச் செல்லும் நகரவாசிகளால் மாநகரம் முழுவதும் போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பித்து விடுகிறது.
சமீபத்தில், பிஸியான சாலைகளில் பைக் ஓட்டும் போது மடிக்கணினியில் வேலை செய்யும் இளம் பெண் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த இளம்பெண் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதும் வைரலானது. இந்த வீடியோவுக்கு ‘பெங்களூருவில் மட்டும்..’ என தலைப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற இந்த சிலிக்கான் சிட்டியில் போக்குவரத்து சிக்கல்களை பிரதிபலிக்கும் பல சம்பவங்கள் சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ளன.







