பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் பெங்களூரு அணி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர். 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.  இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் 2 முறையும், 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.  லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு ஒரு அணி குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.  அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.  இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடிய  பெங்களூரு அணி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.  இந்த நிலையில்,  உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.