முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

தெற்காசியாவின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா?

தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு கேம்பகவுடா சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்த தர வரிசையை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு, சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-ல் நடைபெற்றது.

இதில், உலகின் சிறந்த விமான நிலையமாக கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பணியாளர்களைக் கொண்ட விமான நிலையத்திற்கான விருதுக்கு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அணுகுவதற்கு எளிதான விமான நிலையத்திற்கான விருதுக்கு துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையமும், தூய்மையான விமான நிலையத்திற்கான விருதுக்கு ஜப்பானின் டோக்கியோ விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்வேறு கூறுகளில் சிறந்து விளங்கும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டுள்ள ஸ்கைட்ரேக்ஸ், இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூருவின் கேம்பகவுடா சர்வதேதச விமான நிலையத்தை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.

விமான நிலைய நுழைவு வாயிலில் நடத்தப்படும் சோதனை, வெளியேறும் இடத்தில் நடத்தப்படும் சோதனை, வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள், விமான நிலைய ஷாப்பிங் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக தங்கள் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விமான நிலையம் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு

Saravana Kumar

அகில் பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தற்கொலை

Halley Karthik

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை; டீன் ரத்தினவேலுக்கு ப.சிதம்பரம் ஆதரவு

Ezhilarasan