ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பென் ஸ்டோக்ஸ்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு 31 வயது ஆகிறது. இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையில் இன்று…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு 31 வயது ஆகிறது. இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையில் இன்று நடைபெறவுள்ள ஒரு நாள் ஆட்டமே பென் ஸ்டோக்ஸுக்கு கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாகும்.
பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தனது ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி ஒரு நாள் போட்டியை எனது சொந்த ஊரான டர்ஹம் மைதானத்தில் இன்று விளையாடுகிறேன். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவு கடினமானதாகும். இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தை மிகவும் விரும்பிச் செய்தேன். தொடர்ந்து 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதே உத்வேகத்துடன் விளையாடுவது இப்போது என்னால் இயலாத ஒன்று.

20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார் பென் ஸ்டோக்ஸ்.
அயர்லாந்து அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார் பென் ஸ்டோக்ஸ். இதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் 2919 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் பதிவு செய்ததுடன், 74 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.