ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி குடும்பத்தினரால் அடித்து கொலை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கூலித் தொழிலாளியை திட்டமிட்டு அடித்து கொலை செய்ததாக அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருக்கும் பாலகோம்பை கிராமத்தைச்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கூலித் தொழிலாளியை திட்டமிட்டு அடித்து கொலை செய்ததாக அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருக்கும் பாலகோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைதுரை. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பாலகோம்பை கிராமத்திற்கு அருகே உள்ள மயானத்தில் வெள்ளைதுரை உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளைதுரையின் மனைவி வள்ளியும், அவரது உறவினர்களும் சேர்ந்து திட்டமிட்டு அவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

மதுப்பழக்கம் கொண்ட வெள்ளைத்துரை, மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, தினசரி அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வள்ளி, தமது தாயார் தங்கம்மாள், சகோதரர்கள் சண்முகவேல், தெய்வேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளைத்துரை அடித்துக் கொன்றுள்ளனர். இதையடுத்து, வள்ளி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.