எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுகவுடன், பாமக இணைந்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







