ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்துவிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு கலந்து கொள்ளும் இந்திய அணியின் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணித்தேர்வு கூட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், அவரது குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் என பலரும் கலந்து கொண்டனர். அதன்படி சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட முழு இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023