பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து!

ஈகை திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற்று தரவேண்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.…

ஈகை திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற்று தரவேண்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இறைதூதர் நபிகளின் தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், இனிப்புக்களை பரிமாறியும் இஸ்லாமியர்கள் தங்களின் அன்பையும், கருணையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்  நிலையில், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1674263363252256768?s=20

 

அதேபோல், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் என்பது அன்பு மற்றும் தியாகத்தின் புனித பண்டிகையாகும். தியாகம் மற்றும் மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையின் பாதையில் செல்ல இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயத்தில் சகோதரத்துவத்தை வளர்க்க உறுதிமொழி எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/rashtrapatibhvn/status/1674234125648265216?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.