பிஒய்டி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு, கடனுதவி வழங்கப்படும் என பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் மின்சார வாகன விற்பனையில் பிஒய்டி நிறுவனம் தனி முத்திரை பதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பிஒய்டி இந்தியா-வின் பயணிகள் மின்சார வாகன வணிகப்பிரிவின், மூத்த துணைத் தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிறு குறு நிறுவனங்கள், வாகன நிதியுதவி பிரிவின் தலைவர் சிதாந்த் தத்வால் ஆகியோர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தால், இந்தியா முழுவதும் உள்ள பிஒய்டி மின்சர வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, விரிவான வாகன நிதியுதவி தீர்வு வழங்கப்படுவதை இந்த கூட்டு உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. பிஒய்டி நிறுவனத்தின் புதுமையான மின்சார வாகன தயாரிப்புகளுடன், இந்திய மின்சார வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த ஒத்துழைப்பு உருவாக்கும்.
ஏற்கனவே, முன்னணி வங்கிகளுடன், பிஒய்டி மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி வழங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இப்போது இந்த பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் உடனான கூட்டாண்மையும் ஒன்று. வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கு நிதித்தீர்வுகளை வழங்குவதுடன், இந்திய மின்சார வாகன சந்தையில் பசுமை எதிர்காலத்தை நோக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய பயணத்தைத் தொடங்கும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது,” என்றும் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் எஸ்எம்இ மற்றும் ஆட்டோ பிரிவின் தலைவர் . சிதாந்த் தட்வால் பேசுகையில், “சமீபத்திய ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக பிஒய்டி முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வாகன நிதிக்கடன் சந்தையானது, தடையற்ற கடன் அணுகலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
எங்களுடைய தளர்வான கடன் திட்டங்கள் (ஃபிளெக்சி லோன்ஸ்) போன்ற ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கொண்ட சிரமம் இல்லா செயல்முறைகள், கடன் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும். அந்த வகையில் பிஒய்டி இந்தியாவுடன் செழிப்பான வர்த்தக உறவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் என்பது தொழில்நுட்பத்திறனுடன் இயங்கும் வங்கியல்லா நிதியுதவி நிறுவனமாகும். இந்நிறுவனம் விரிவான நிதித் தீர்வுகளை வழங்குவதுடன் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பிஒய்டி இந்தியா நிறுவனத்துடனான, ஒத்துழைப்பின் மூலம், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னோடியான நிதி வசதித் தீர்வுகள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விரிவான வாடிக்கையாளர் தளம் ஆகியவை இந்திய மின்சார சந்தையில் பிஒய்டி இந்தியாவின் இருப்பை கணிசமாக மேம்படுத்தும்.
மேலும், இந்த கூட்டு உடன்பாடு, இந்திய மின்சார வாகன கடனுதவிச் சந்தைத்துறையில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தளத்தைப் பரவலாக்கி வலுப்படுத்தும். பசுமை எதிர்காலத்துக்கு தமது பங்களிப்பை வழங்க பிஒய்டி நிறுவனத்திற்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- ரா.தங்கபாண்டியன்







