சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை…

சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக…

சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.