பத்ரிநாத்-கேதார்நாத் கோயில்கள் ; இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை…?

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் படி இந்த ஆண்டு ஆறு மாத குளிர்காலத்தையொட்டி ஆறுமாதங்கள் மூடிவைக்கப்பட்டுள்ள பத்ரிநாத கோயில் ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவத தடை செய்யப்படும் என்றும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு (BKTC) தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடையானது BKTC- யின் அதிகார வரம்பிற்குட்பட்ட 45 கோயில்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு (BKTC)தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் திவேதி கூறியதாவது ; உத்தரகாண்டின் மத மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதே தங்களுக்கு மிகவும் முக்கியமானது. பாரம்பரியமாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருந்ததுள்ளன. ஆனால் பாஜக அல்லாத அரசாங்கங்களின் காலத்தில் இந்த மரபுகள் கடுமையாக பின்பற்றவில்லை. எனவே, இந்த மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.