டிரெண்டிங்கில் இணைந்த பேட் கம்மின்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘ஆவேசம்’ பட டிரெண்டிங்கில் இணைந்துள்ளார்.  ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘ஆவேசம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது.  மன்சூர்…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘ஆவேசம்’ பட டிரெண்டிங்கில் இணைந்துள்ளார். 

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘ஆவேசம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது.  மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.  இப்படம் வெளியான 13 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்தது.  சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியது.  இந்நிலையில், ஆவேசம்‘ திரைப்படம் வரும் மே 9ம் தேதி Amazon Prime OTT-ல் வெளியாகியுள்ளது.  

இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு ரீல்ஸ் செய்திருப்பார்.  அதில் சிரிப்பு ஒரு பக்கம், கோபம் மறு பக்கம் என இருக்குமாறு செய்திருப்பார்.  இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  இதனை வைத்து பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் பதிரானா,  முஸ்தஃபிசூர் ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள்.   இந்த ரீல்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் ஆஸி. அணியின் கேப்டனுமாகிய பாட் கம்மின்ஸ் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளார்.  நேற்றையப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.  இதனை கொண்டாடும் விதமாக பாட் கம்மின்ஸ் ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்துள்ளார்.  இந்த ரீல்ஸ் வீடியோவை “ஆரஞ்சு ஆர்மி மகிழ்ச்சி தானே? ” என ஹைதராபாத் அணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

https://twitter.com/SunRisers/status/1786267276918030553

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.