ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், தற்போதைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா, 3 நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் விஐபிக்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், சச்சின், டோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் என பெரும் பட்டாளமே அம்பானி வீட்டு இல்ல நிகழ்வில் பங்கேற்றன. விழா முழுவதும் ஆடல், பாடல் என அசத்தலாக நடைபெற்றது. வெறும் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூ. 1,250 கோடி செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
Pat Cummins dancing on a Bollywood song wasn't on my Bingo Card 😂😂👏👏👏 pic.twitter.com/OZgP6qtJ8G
— aman (@bilateral_bully) May 8, 2024
தற்போது மீண்டும் இரண்டாவது pre-wedding கொண்டாட்ட நிகழ்வை அம்பானி நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், தற்போதைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் நடனம் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பகிரப்பட்டதிலிருந்து தற்போது வரை இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.







