முக்கியச் செய்திகள் தமிழகம்

பி.எட். மாணவர் சேர்க்கை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிஎட் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பிஎட் படிப்புகளுக்கு 2000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், 2022-ம் ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது. http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது சேர விரும்பும் கல்லூரிகள் பட்டியலை குறிப்பிட்டு சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்

G SaravanaKumar

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்

Halley Karthik

மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

Halley Karthik