முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது அவதார் பாகம் 2; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்தின் அவதார் 2 பாகம் இன்று வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட160 மொழிகளில் இன்று அவதார் திரைப்படத்தின் 2 பாகம் வெளியாகியுள்ளது. 20th செஞ்சுரி ஸ்டூடியோ தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, அவதார் முதல் பாகத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அது மட்டுமல்லாமல், அதி நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி, கானவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது.

இதன் வெற்றி உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் அவதார் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவதார் தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த 2 ஆம் பாகமும் உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இன்று உலகம் இந்த படம் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில், நேற்று நள்ளிரவு அவதார் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை காண, ஏராளமான ரசிகர்கள் தங்கள் நண்பர்களுடன் வருகை தந்து படத்தை கண்டு மகிழ்ந்தனர். அவதார் முதல் பாகம் தங்கள் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும் அதே போல் இந்த திரைப்படமும் பிரமாண்டமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் படத்தை காண வந்திருப்பதாக ரசிகர்கள் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக தலைவர் பட்னாவிஸ் வாயில் கொரோனா வைரசை திணிப்பேன்: சிவ சேனா எம்எல்ஏ!

எல்.ரேணுகாதேவி

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Saravana

ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்

எல்.ரேணுகாதேவி