அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | இறுதிச்சுற்று தொடங்கியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இறுதி சுற்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இறுதி சுற்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன.

Avaniyapuram Jallikattu: 3 selected for the final round after 9 rounds!

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

இதுவரை 10 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் 21 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 6 பேர், காவலர் ஒருவர் என இதுவரை 45 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 12 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி சுற்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.