அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த நவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த நவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்படுகின்றனர்.

Avaniyapuram Jallikattu: 3 selected for the final round after 9 rounds!

ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன. 10 சுற்றுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இறுதி சுற்று சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

இந்த சூழலில், ஒன்பதாவது சுற்றில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடி வீரர் 406 என்னில் விளையாடி வந்தார். அப்போது, வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று நவீன் குமாரின் மார்பில் முட்டியது. இதில் படுகாயமடைந்த நவீன் குமார் அவனியாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நவீன் குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.