மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதால் அதற்கான பணிகள் நேற்று காலை தொடங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இந்தாண்டு நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.