ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 4-வது போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதி வருகிறது. லாகூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட்165 ரன்களும், ஜோ ரூட் 68 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பென் ட்வார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் சம்பா, மார்னஸ் லாபுசாக்னே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில், தென்னாப்பிரிக்க அணி அடித்திருக்கும் 351 ரன்கள்தான் மிகப்பெரிய ஸ்கோராக இருக்கிறது. மேலும், தனிநபர் அதிகபட்ச ரன்களில், இன்று டக்கெட் அடித்த 165 ரன்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. பிட்ச் தொடர்ந்து பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலிய அணி, இந்த ஸ்கோரை துரத்த அதிக வாய்ப்புள்ளது.







