முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!

3வது டெஸ்ட் போட்டியில் மைதனாத்தில் பேட்டிங் கீரிஸை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அழித்தது வைரலாகி வரும் நிலையில் 4வது போட்டியில் ரோகித் ஷர்மா ஸ்மித்தை போல் இமிட்டேட் செய்த சம்பவம் சற்று நகைப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது தோல்வியின் விழும்பில் இருந்த இந்திய அணியை ரிஷப் பந்த், விகாரி, அஸ்வின் ஆகிய வீரர்கள் மீட்டு போட்டியை சமன் செய்தனர். இந்த போட்டியின் போது இந்திய வீரர்களை ஆட்டமிழக்க செய்ய ஆஸ்திரேலிய வீரர்கள் பல யுக்திகளை கையாண்டனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் விமர்சனத்திற்கு ஆளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் 3வது டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தின் பேட்டிங் கிரீஸை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அழிப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஸ்மித்தை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலடி தரும் வகையில் இன்று நடைபெற்ற 4 வது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்த போது காமெடியாக கிரீஸ் அருகில் சென்று இந்திய வீரர் ரோகித் ஷர்மா இமிட்டேட் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 40 ஓவர் முடிவில் ஸ்மித் சக பேட்ஸ்மென் கேமரூன் கிரீனுடன் பேசிக்கொண்டிருப்பது போன்று பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வரும் ரோகித் ஷர்மா பேட்டிங் கீரிஸ் அருகில் வந்து பேட் செய்வதுபோல் இமிட்டேட் செய்து விட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

Arivazhagan Chinnasamy

MBBS படிப்புகளுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தான் முடிவு செய்யும் : எல்.முருகன்

Saravana

Leave a Reply