இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் உள்ளார். இன்று அவர் முன்பு மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலையை சீரமைக்கக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணையின் போது நீதிபதி கவாய், கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்ற அவையிலேயே கவாய் மீது காலணி ஒன்றை வீச முயன்றுள்ளார். அப்போது துரிதமாக செயல்பட்ட நீதிமன்ற காவலர்கள் அந்நபரை தடுத்து, நீதிமன்ற அவையை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
அந்நபர் வெளியேறும் போது “சனாதன் தர்மத்திற்கு அவமரியாதை செய்வதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார்.







